FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தென்காசியில் 18 கல்குவாரிகளை மூட அமைச்சர் உத்தரவு!

தென்காசியில் விதிமீறலில் ஈடுபட்ட கல்குவாரிகள் மூட உத்தரவிட்டுள்ளது பற்றி...

கோப்புப் படம் - DNS
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் வந்த புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு 18 கல்குவாரிகளை மூட அமைச்சர் டி.கே. பிரபு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விதிமீறலில் ஈடுபட்ட இந்த 18 கல்குவாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Advertisement

Advertisement

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 54 கல்குவாரிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி உதவி ஆட்சியர்களின் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 09.05.2026 முதல் ஆய்வு செய்யப்பட்டன.

இந்நிலையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர். டி.கே. பிரபு, 25.05.2026 அன்று அதிகாலை தென்காசி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட 3 குழுக்களின் முதல்கட்ட புலத்தணிக்கையின் போது மொத்தமுள்ள 54 கல்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 18 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகின்றன.

மேலும், மேற்படி 3 குழுக்களின் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில் உரிய மேல்நடவடிக்கை தொடரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

summary

Minister Orders Closure of 18 Stone Quarries in Tenkasi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments