சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ்! விருதுநகர் தவெக நிர்வாகி நீக்கம்!
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ் வெளியிட்ட விருதுநகர் மாவட்ட செயலாளரை கட்சியில் இருந்து நீக்கி தவெக உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட விருதுநகர் மாவட்ட செயலாளரை கட்சியில் இருந்து நீக்கி தமிழக வெற்றிக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதியின்றி ரீல்ஸ், விடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது சட்டப்படி குற்றம் என்று சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனிடையே விருதுநகர் தவெக மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல், அங்குள்ள முகாமொன்றில் நுழைந்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ் விடியோவாக அதனை வெளிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து விருதுநகர் மத்திய ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து 3 மாத காலத்திற்கு முத்துவேல் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
''கட்சியின் ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல்பாடுகளில் தாங்கள் ஈடுபட்டதாக பெறப்பட்ட தகவல்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில், கட்சியின் நலன் மற்றும் ஒழுங்கைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எனவே, தாங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து மூன்று மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கப்படுகிறீர்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reels while administering polio drops Virudhunagar TVK functionary removed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.