FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பேட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேட்டி

Updated On : 15 ஜூலை 2026, 12:30 pm IST
முதல்வர் விஜய் | மார்க்சிஸ்ட் கம்யூ. செயலர் பெ. சண்முகம் - கோப்புப் படம்
பகிர்:

தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இன்று (புதன்கிழமை) சந்தித்துப் பேசினார்.

தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த சரணாலயத்தைச் சுற்றியுள்ள 98 கிராமங்களைச் சேர்ந்த மக்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

அப்பகுதியில் பல ஆண்டுகளாக பூர்வகுடிகளாக வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்தும் அகற்றக் கூடாது என முதல்வரிடம் பெ. சண்முகம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"இடதுசாரிகள் அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என்று ஏற்கெனவே முடிவெடுத்ததுதான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், 'அமைச்சரவையில் இடம்பெறுவோம்' என எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை. அவரிடம் அதுதொடர்பாக விளக்கம் கேட்கவிருக்கிறேன். தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

நேற்று ஓசூரில் செய்தியாளர்களுடன் பேசிய மு. வீரபாண்டியன், "தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் சூழல் வரும். அந்த சூழல் வரும்போது இந்த (ஒசூர்) மண்ணில் இருந்தே கம்யூனிச தோழர்கள் அமைச்சர்களாக வருவார்கள். அந்த காலம் நெருங்குகிறது" என்று கூறினார்.

இந்திய கம்யூ. சார்பில் தளி தொகுதி எம்எல்ஏவாக ராமச்சந்திரன் உளளார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Will the Marxist Communist Party be part of the TVK cabinet, P. Shanmugam reply

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments