FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரிசி விலை ஆகாயத்தை நோக்கி..! ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்

அரிசி விலை உயர்ந்து வருவது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கருத்து...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் | முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

அரிசி விலை கடுமையாக உயர்ந்து வருவது ஆட்சியாளர்களின் காதுக்கு இன்னும் எட்டவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதுமே விலைவாசி உயர்வு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

Advertisement

Advertisement

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இதுபற்றி எக்ஸ் பக்கத்தில்,

"அரிசி விலை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. 25 கிலோ அரிசி மூட்டையின் விலை கடந்த மாதம் ரூபாய் 1,800 ஆக இருந்தது.

இந்த மாதம் என்ன விலையோ, எவ்வளவு உயரப் போகிறதோ? அரிசி விலை ஆகாயத்தை நோக்கிப் பறக்கிறது என்பது மட்டும் உறுதி.

ஆனால் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டவில்லை போலும்!" என்று பதிவிட்டுள்ளார்.

summary

CPIM State Secretary P. Shanmugam comments on the rising price of rice

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments