FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேட்டி...

17 வினாடிகள் முன்பு
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் - கோப்புப்படம்
பகிர்:

இடைத்தேர்தலில் தவெகவினர்தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்கின்றனர், அந்த தொகுதி மக்களே இந்த வாக்குமூலத்தைக் கொடுத்திருக்கின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

தலைமைத் தேர்தல் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெ. சண்முகம், பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"மதுராந்தகத்தில் தவெகவினர்தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்கின்றனர். நாங்கள் அங்கு பிரசாரத்துக்கு சென்றபோது நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்டோம். அப்போது 'எல்லோரும் பணம் கொடுக்கிறார்கள், நீங்கள் பணம் கொடுக்கவில்லையே.. ' என்று சில கிராம மக்கள் என்னிடம் கேட்டார்கள். எந்தெந்த கட்சி எல்லாம் பணம் கொடுத்தார்கள் என்று கேட்டபோது, தவெகவினர்தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்ததாகச் சொன்னார்கள்.

Advertisement

Advertisement

தூயசக்தி, நாங்கள் ஓட்டுக்கு எல்லாம் பணம் கொடுக்க மாட்டோம் என்றுதான் கடந்த தேர்தலிலும் முதல்ர் பிரசாரம் செய்தார். இப்போதும் அப்படியே பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் மதுராந்தகத்தில் பொதுமக்கள் கொடுத்திருக்கும் வாக்குமூலம் இது.

'தவெக அதிக பணம் கொடுத்திருக்கிறார்கள், நீங்கள் கொஞ்சமாவது கொடுங்கள்' என்று மக்கள் எங்களிடம் பேரம் பேசும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

எங்கள் கட்சியின் பலம், கொள்கைகள் குறித்து எடுத்துரைத்து நாங்கள் எந்த சூழலிலும் பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறினோம்.

இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்மந்தப்பட்ட கட்சித் தலைவர்களும் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

summary

It is TVK that is paying the highest amount of money per vote in the by-election: CPIM Shanmugam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments