வணிகம்

ஏற்றத்தில் எஸ்பிஐ பங்குகள்! பங்குச் சந்தையில் ஏற்றம்

உலகளாவிய சந்தைகளில் உறுதியான ஸ்திரதன்மை அதிகரித்துள்ளதால் இன்றைய பங்குச் சந்தைகள் போக்கு உயர்ந்து முடிந்தது.

DIN


மும்பை: உலகளாவிய சந்தைகளின் உறுதியான நிலைத்தன்மையால் இன்றைய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன.

நேற்றைய ஏற்றத்தைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தையின் டாப் 30-பங்குகளின் வர்த்தகம் 91.62 புள்ளிகள் உயர்ந்து 61,510.58 நிலைத்து நின்றது. இன்றைய பகல் வர்த்தகத்தில் இது 361.94 புள்ளிகள் உயர்ந்து 61,780.90 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 23.05 புள்ளிகள் அதிகரித்து 18,267.25ல் முடிவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டிஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, சன் பார்மா, மாருதி, என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பவர் கிரிட், டெக் மஹிந்திரா, டைட்டன், பார்தி ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை பங்குகள் சரிவில் முடிந்தன.

அதேவேளையில், சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. பிற்பகல் வர்த்தகத்தில் ஐரோப்பாவில் உள்ள பங்குச் சந்தைகள் பெரும்பாலும் ஏற்றத்துடன் வர்த்தகமாயின. வால் ஸ்ட்ரீட் வர்த்தகம் இன்று உயர்வுடன் முடிந்தது.

சர்வதேச எண்ணெய் பெஞ்ச்மார்கான பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 1.05 சதவீதம் அதிகரித்து 89.29 அமெரிக்க டாலராக உயர்ந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT