வணிகம்

மும்பை பங்குச் சந்தை 762 புள்ளிகள் உயர்வுடன் முடிவு

DIN

மும்பை: மும்பை பங்குச் சந்தை இன்றைய வர்த்தக முடிவில் 762.10 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 62,272.68-இல் நிலைபெற்றது. தேசியப் பங்குச் சந்தை 216.85 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 18,484.10-இல் நிலைபெற்றது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக காளையின் ஆதிக்கம் நீடித்து வந்ததால், மும்பை பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் நிலைபெற்றது.

பகலில் இது 901.75 புள்ளிகள் உயர்ந்து அதன் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக 62,412.33 என்ற குறியீட்டெணை சென்று அடைந்தது.

தேசிய பங்குச் சந்தை இன்று  216.85 புள்ளிகள்  அதிகரித்து 18,484.10-இல் முடிவடைந்தது. பகலில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு குறியீட்டெண் 18,529.70- ஐ எட்டியது.

சென்செக்ஸ் இன்று உயர்வைக் காண சில பல தூண்டுதல்கள் உதவின. 

முதலாவது, அமெரிக்க பங்குகளின் உயர்வு, பத்திர வருவாயில் சரிவு மற்றும் டாலர் வீழ்ச்சி ஆகியவற்றால் சந்தை கட்டுமானம் சாதகமாக மாறியது. 

இரண்டாவது, இந்தியாவில் மேக்ரோ கடன் வளர்ச்சியில் நிலையான உயர்வும், அதனைத் தொடர்ந்து வலுவான பொருளாதார மீட்சியும். இதனுடன், கச்சா எண்ணெயில் ஏற்பட்ட திருத்தம் சந்தைக்கு பெரும் சாதகமாக அமைந்தது.

இன்றைய வர்த்தகத்தில், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, பவர் கிரிட், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவற்றின் பங்குகள் இன்று உயர்வுடன் முடிவடைந்தன. அதேசமயம்,  பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT