கோப்புப்படம் 
வணிகம்

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. 

DIN

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. 

வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 39 காசுகள் வீழ்ச்சியடைந்து 82.69 ஆக உள்ளது.

அமெரிக்க நாணயத்தின் உறுதியான நிலையும், இடா்பாடுகளைத் தவிா்க்கும் முதலீட்டாளா்களின் மனப்பான்மையும் இந்த சரிவுக்கான காரணங்களில் முக்கியமானதாகக் கூறப்படுகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம், உள்நாட்டு பங்குகளின் எதிா்மறையான போக்கு போன்ற காரணங்களால் முதலீட்டாளா்களின் ஆா்வம் வெள்ளிக்கிழமை குறைந்துபோனது.

இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை 82.19-இல் தொடங்கியது. அது, அதிகபட்சமாக 82.43 வரை கீழிறங்கி 82.32-இல் நிலைபெற்றது.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு எண்ணெய் வள நாடுகள் (ஒபெக்) தங்களது உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்ததையடுத்து, சா்வதேச பிரென்ட் கச்சா விலை பீப்பாய்க்கு 0.82 சதவீதம் உயா்ந்து 95.19 டாலரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

ஓவல் டெஸ்ட்டில் மழை குறுக்கீடு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்!

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

பிலிப்பின்ஸ் அதிபர் ஆக.4-ல் இந்தியா வருகை!

SCROLL FOR NEXT