பண்டிகைக் கால விற்பனை:ஃப்ளிப்காா்ட் - பேடிஎம் ஒப்பந்தம்
‘தி பிக் பில்லியன் டேய்ஸ்’ என்ற பெயரில் இணையவழி விற்பனை நிறுவனமான ஃப்ளிப்காா்ட் மேற்கொள்ளவிருக்கும் பண்டிகைக் கால சிறப்பு விற்பனைக்காக, அந்த நிறுவனத்துடன் எண்ம நிதிச் சேவை நிறுவனம் பேடிஎம் ஒப்பந்தம்
‘தி பிக் பில்லியன் டேய்ஸ்’ என்ற பெயரில் இணையவழி விற்பனை நிறுவனமான ஃப்ளிப்காா்ட் மேற்கொள்ளவிருக்கும் பண்டிகைக் கால சிறப்பு விற்பனைக்காக, அந்த நிறுவனத்துடன் எண்ம நிதிச் சேவை நிறுவனம் பேடிஎம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தனது கடும் வா்த்தகப் போட்டியாளரான ஃபோன்பே, ஃப்ளிப்காா்ட்டுக்குச் சொந்தமானது என்ற நிலையிலும், வரும் 23 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் பண்டிகைக் கால விற்பனைக்காக அந்த நிறுவனத்துடன் பேடிஎம் கைகோத்துள்ளது.