முகப்பு
வணிகம்

அசத்தலான அம்சங்கள்.. ரூ.7,000 சலுகை.. அறிமுகமானது ‘ரியல்மீ நியோ 3டி’ ஸ்மார்ட்போன்

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘ஜிடி நியோ 3டி’ ஸ்மார்ட்போனை ரூ.7,000 சலுகை விலையுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:56 AM
பகிர்:

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘ஜிடி நியோ 3டி’ ஸ்மார்ட்போனை ரூ.7,000 சலுகை விலையுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரியல்மீ நிறுவனம் சமீப காலமாக இந்தியாவில் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு  வருகிறது. அந்த வகையில் புதிதாக  ‘ஜிடி நியோ 3டி’ ஸ்மார்ட்போனை ரூ.7,000 சலுகை விலையுடன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

‘ஜிடி நியோ 3டி’ சிறப்பம்சங்கள் :

*  6.62 இன்ச் அளவுகொண்ட  அமோல்ட் எச்டி திரை 

*  ஸ்னாப்டிராகன் 880 எஸ்ஓசி பிராசசர்

*  6, 8 ஜிபி ரேம்; 128, 256  ஜிபி மெமரி

* பின்பக்கம் 64 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், முன்பக்க செல்ஃபி கேமரா 16 எம்பி பொருத்தப்பட்டுள்ளது.

*  5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி, 80 வாட்ஸ் சூப்பர் டார்ட் சார்ஜ் 

*  ஆண்டிராய்ட் 12 - ரியல்மி இயங்குதளம்

இந்தியாவில் இதன் விற்பனை விலை 6ஜிபி ரேம்; 12ஜிபி மெமரி ரூ.29,999 ஆகவும் 8ஜிபி ரேம்; 128 ஜிபி மெமரி ரூ.31,999 மற்றும் 8ஜிபி ரேம்; 256 ஜிபி மெமரி ரூ.33,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், விற்பனையின்போது ரூ.7,000 சலுகை விலையாகக் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.