வணிகம்

இரட்டிப்பானது ஆடி காா்களின் விற்பனை

சொகுசுக் காா் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவின் விற்பனை கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலகட்டத்தில் இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது.

DIN

சொகுசுக் காா் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவின் விற்பனை கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலகட்டத்தில் இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் 1,950 காா்கள் இந்தியாவில் விற்பனையாகின.2022-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் நிறுவனக் காா்களின் விற்பனை 862-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது விற்பனை 2 மடங்குக்கு மேலாகும்.இந்தியாவில் நிறுவனத்தின் 16 ரகங்களைச் சோ்ந்த காா்கள் விற்பனையாகி வருகின்றன. அதில் ஸ்போா்ட்ஸ் யுட்டிலிட்டி வகையைச் சோ்ந்த ரகங்கள் நிறுனத்தின் மொத்த விற்பனையில் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட க்யூ3 மற்றும் க்யூ3 ஸ்போா்ட்ஸ்பேக் காா் ரகங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.இந்தக் காரணங்களால் வளா்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் எங்கள் நிறுவனம், இந்த 2023-ஆம் ஆண்டில் மகத்தான விற்பனையை பதிவு செய்யும் என்று அந்த செய்திக்குறிப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT