வணிகம்

யெஸ் வங்கியின் 4வது காலாண்டு நிகர லாபம் 45 சதவிகிதம் சரிவு

தனியார் துறையை சேர்ந்த யெஸ் வங்கி தனது மார்ச் காலாண்டு நிகர லாபம் 45 சதவிகிதம் சரிந்து ரூ.202 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

DIN

மும்பை: தனியார் துறையை சேர்ந்த யெஸ் வங்கி தனது மார்ச் காலாண்டு நிகர லாபம் 45 சதவீதம் சரிந்து ரூ.202 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

2023ஆம் நிதியாண்டு வங்கியின் நிகர லாபம் 32.7 சதவீதம் குறைந்து ரூ.717 கோடியாக இருந்தது என்று தனது ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் யெஸ் வங்கி தெரிவித்துள்ளது.

மார்ச் காலாண்டு மற்றும் நிதியாண்டுக்கான லாபங்கள் துரிதப்படுத்தப்பட்ட ஒதுக்கீடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில், அதன் முக்கிய நிகர வட்டி வருமானம் 15.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,105 கோடியாகவும், வட்டி அல்லாத வருமானம் 22.8 சதவிகிதம் அதிகரித்து ரூ .1,082 கோடியாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT