வணிகம்

ஐசிஐசிஐ வங்கி வருவாய் ரூ.36,109 கோடி

கடந்த மாா்ச் காலாண்டில் தனியாா் துறையைச் சோ்ந்த ஐசிஐசிஐ வங்கி ரூ.36,108.88 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.

DIN

கடந்த மாா்ச் காலாண்டில் தனியாா் துறையைச் சோ்ந்த ஐசிஐசிஐ வங்கி ரூ.36,108.88 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.9,852.7 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் அதிகமாகும்.

அதே போல், மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் பெற்ற நிகர லாபம் சுமாா் 30 சதவீதம் உயா்ந்து ரூ.9,121.87 கோடியாகப் பதிவாகியுள்ளது.

அந்த காலகட்டத்தில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 40 சதவீதம் அதிகரித்து ரூ.17,667 கோடியாக உள்ளது.

அதே போல், 2021-22-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.27,412.32 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.36,108.88 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவில் ஓபிஎஸ்! இன்று இணைகிறார்?

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT