வணிகம்

லாபப் பதிவால் தள்ளாடியது பங்குச்சந்தை

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை லாபப் பதிவு காரணமாக பங்குச்சந்தை ஏற்ற,

தினமணி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை லாபப் பதிவு காரணமாக பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றமின்றி 4 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச்சந்தையில் தொடக்கத்தில் இருந்தது. ஆனால், பிற்பகலில் லாபப் பதிவு அதிகரித்ததால் சந்தை தள்ளாட்டம் கண்டது. மெட்டல், எஃப்எம்சிஜி பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. ஆனால், வங்கிப் பங்குகள் சோபிக்கத் தவறின.
 மேலும், அமெரிக்காவில் சாத்தியமான வங்கி வட்டி விகித உயர்வு, வெளிநாட்டு நிதி வெளியேற்றம் பற்றிய கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்வதில் கவனம் செலுத்தியதால் சந்தை பெரிய அளவில் மாற்றமின்றி நிலைத்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.41 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.306.96 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.1,901.10 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் தள்ளாட்டம்: காலையில் 56.33 புள்ளிகள் கூடுதலுடன் 65,272.42-இல் தொடங்கிய சென்செக்ஸ் 65,165.45 வரை கீழே சென்றது. பின்னர் அதிகபட்சமாக 65,362.91 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 3.94 புள்ளிகள் (0.01 சதவீதம்) கூடுதலுடன் 65,220.03-இல் முடிவடைந்தது.
 16 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,314 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 726 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 23 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 26 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
 நிஃப்டி 3 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் 51 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 23.50 புள்ளிகள் கூடுதலுடன் 19,417.10-இல் தொடங்கி, 19,381.30 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 19,443.50 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 2.85 புள்ளிகள் (0.01 சதவீதம்) கூடுதலுடன் 19,396.45-இல் நிறைவடைந்தது.
 திங்கள்கிழமை புதிதாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முகேஷ் அம்பானியின் ஜியோ ஃபைனானசியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனப் பங்குகள் செவ்வாய்க்கிழமையும் குறைந்தபட்ச உறை நிலையான (லோயர் ஃப்ரீஸ்) 5 சதவீதம் குறைந்து ரூ.236.45-இல் நிலைபெற்றது.
 ஏற்றம் பெற்ற பங்குகள்
 என்டிபிசி 1.33%
 எம் அண்ட் எம் 0.75%
 விப்ரோ 0.65%
 பார்தி ஏர்டெல் 0.64%
 மாருதி 0.61%
 டாடா ஸ்டீல் 0.60%
 சரிவைக் கண்ட பங்குகள்
 ஜியோ ஃபைனான்ஸ் 4.99%
 பஜாஜ் ஃபின்சர்வ் 0.75%
 எஸ்பிஐ 0.55%
 டிசிஎஸ் 0.54%
 டெக் மஹிந்திரா 0.48%
 ஹெச்டிஎஃப்சி வங்கி 0.43%
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT