முகப்பு
வணிகம்

வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் 256 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச்சந்தையில் வியாழக்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்து நிலையற்ற தன்மையில் இருந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 256 புள்ளிகளை இழந்தது நிலைபெற்றது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:57 AM
பகிர்:

பங்குச்சந்தையில் வியாழக்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்து நிலையற்ற தன்மையில் இருந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 256 புள்ளிகளை இழந்தது நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும், பின்னா் தடுமாற்றம் கண்டது. குறிப்பாக முன்பேர வா்த்தகத்தில் கணக்கு முடிக்க கடைசி நாளாக இருந்ததால், ஏற்ற, இறக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகல் வா்த்தகத்தின் போது வங்கி, எஃப்எம்சிஜி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தன. இதனால், சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டதுடன், 3 நாள் தொடா் ஏற்றத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.72 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.309.59 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.494.68 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் சரிவு: காலையில் 91.08 புள்ளிகள் கூடுதலுடன் 65,178.33-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 65,277.04 வரை மேலே சென்றது. பின்னா், 64,723.63 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 255.84 புள்ளிகளை (0.39 சதவீதம்) இழந்து 64,831.41-இல் முடிவடைந்தது.

22 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் 22 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 8 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 973 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,060 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 16 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 31 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 94 புள்ளிகள் சரிவு : தேசிய பங்குச் சந்தையில் 51முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 28.10 புள்ளிகள் கூடுதலுடன் 19,375.55-இல் தொடங்கி, அதிகபட்சமாக 19,388.20 வரை மேலே சென்றது. பின்னா், 19,223.65 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 93.65 புள்ளிகளை (0.48 சதவீதம்) இழந்து 19,253.80-இல் நிறைவடைந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

மாருதி................................................2.49%

டைட்டன்.........................................0.94%

டாடா ஸ்டீல்....................................0.78%

அல்ட்ரா டெக் சிமெண்ட்...............0.66%

டெக் மஹிந்திரா...............................0.41%

ஜியோ ஃபைனான்ஸ்........................0.41%

சரிவைக் கண்ட பங்குகள்

பஜாஜ் ஃபைனான்ஸ்........................1.34%

ஏசியன் பெயிண்ட்............................1.33%

இண்டஸ் இண்ட் பேங்க்.................1.20%

எஸ்பிஐ.............................................1.12%

ஹிந்துஸ்தான் யுனி லீவா்................1.10%

பவா் கிரிட்.......................................1.03%

என்டிபிசி.........................................0.36%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.