tata_sarari 
வணிகம்

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 74,172

டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை கடந்த நவம்பரில் 74,172-ஆக உள்ளது.

DIN


புது தில்லி: டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை கடந்த நவம்பரில் 74,172-ஆக உள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் நிறுவனம் கடந்த நவம்பரில் 74,172 வாகனங்களை விற்பனை செய்தது.

முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 75,478-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை 1.73 சதவீதம் குறைந்துள்ளது.

2022 நவம்பரில் 73,467-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை கடந்த ஏப்ரலில் 1 சதவீதம் குறைந்து 72,64-ஆக உள்ளது.

மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 46,143-ஆக உள்ளது. இது முந்தைய 2022 நவம்பா் மாத உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையோடு (46,425) ஒப்பிடுகையில் 1 சதவீதம் குறைவாகும்.

கடந்த நவம்பரில் 29,053-ஆக இருந்த வா்த்தக வாகனங்களின் விற்பனை 4 சதவீதம் குறைந்து 28,029-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT