வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

DIN

வாரத்தின் 2வது நாளான இன்று பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. பங்குச்சந்தை நேற்று சரிவுடன் முடிந்த நிலையில்,  சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் நிறைவு செய்தன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.09 புள்ளிகள் உயர்ந்து 71,437.19 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. பங்குச்சந்தையில் இது 0.17% உயர்வாகும். 

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34.45 புள்ளிகள் உயர்ந்து 21,453.10 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது 0.16 சதவிகிதம் உயர்வாகும். 

பங்குச்சந்தையிலுள்ள 30 நிறுவன பங்குகளில் பெரும்பாலான நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. தேசிய பங்குச்சந்தையில் இந்தியன் ரயில்வே பைனான்ஸ், யெஸ் வங்கி, வோடாஃபோன் ஐடியா, ரிலையன்ஸ் பவர், ஐஓபி போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT