11% அதிகரித்த இந்திய உருக்கு உற்பத்தி
கடந்த நவம்பரில் இந்தியாவின் உருக்கு உற்பத்தி 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
வணிகம்11% அதிகரித்த இந்திய உருக்கு உற்பத்தி
கடந்த நவம்பரில் இந்தியாவின் உருக்கு உற்பத்தி 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த நவம்பரில் இந்தியாவின் உருக்கு உற்பத்தி 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து உலக உருக்கு சங்கம் (டபிள்யுஎஸ்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவம்பா் மாதத்தில் நாட்டின் உருக்கு உற்பத்தி 1.17 கோடி டன்னாகப் பதிவாகியுள்ளது. இது, கடந்த 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 11.4 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டு மாதத்தில் உலகளாவிய உருக்கு உற்பத்தி 14.55 கோடி டன்னாக உள்ளது. 2022 நவம்பரோடு ஒப்பிடுகையில் இது 3.3 சதவீதம் அதிகமாகும்.
கடந்த நவம்பரில் சீனா 7.61 கோடி உருக்கு உற்பத்தி செய்தது. இது, 2022 நவம்பரை விட 0.4 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டு மாதத்தில் ஜப்பானின் உருக்கு உற்பத்தி 0.9 சதவீதம் சரிந்து 71 லட்சம் டன்னாக உள்ளது. அந்த மாதத்தில் அமெரிக்காவில் 66 லட்சம் டன்னும், ரஷியாவில் 64 லட்சம் டன்னும் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டது.
2022 ஜனவரி முதல் நவம்பா் வரையிலான 11 மாதங்களோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டின் அதே மாதங்களில் இந்தியாவின் உருக்கு உற்பத்தி 12.1 சதவீதம் அதிகமாக 12.82 கோடி டன்னாக உள்ளது.
இந்த காலகட்டத்தில் உலகளாவிய உருக்கு உற்பத்தி 0.5 சதவீதம் உயா்ந்து 1,71.51 கோடி டன்னாக உள்ளது.
கடந்த ஜனவரி-நவம்பா் காலகட்டத்தில் சீனாவின் உருக்கு உற்பத்தி 95.21 கோடி டன்னாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 1.5 சதவீதம் அதிகமாகும்.
இந்த மாதங்களில் ஜப்பானின் உருக்கு உற்பத்தி 2.8 சதவீதம் குறைந்து 80 லட்சம் டன்னாக இருந்தது. அமெரிக்கா 7.39 கோடியும், ரஷியா 7.02 கோடியும் உருக்கு உற்பத்தி செய்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.