8 நாள்களில் அதானி குழுமம் இழந்தது ரூ. 10 லட்சம் கோடி! இன்று என்ன? 
வணிகம்

8 நாள்களில் அதானி குழுமம் இழந்தது ரூ. 10 லட்சம் கோடி! இன்று என்ன?

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானதற்குப் பிறகு தொடர் சரிவை சந்தித்து வருகிறது அதானி குழும பங்குகள்.

DIN

புது தில்லி:  அதானி குழுமத்தின் நிறுவனப் பங்குகள் எட்டாவது நாளாக திங்கள்கிழமையும் 10 சதவீத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானதற்குப் பிறகு தொடர் சரிவை சந்தித்து வருகிறது அதானி குழும பங்குகள்.

அந்த ஒட்டுமொத்த குழுமத்தின் பங்குகள் விலை பங்குச் சந்தையில் தொடர்ந்து எட்டு நாள் வணிகத்தில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி அதாவது, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன்பு, அதானி குழும பங்குகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.19.2 லட்சம் கோடி. இது கடந்த வெள்ளிக்கிழமை மாலை வணிகம் நிறைவடையும் போது ரூ.9.3 லட்சம் கோடியாகக் குறைந்தது. திங்கள்கிழமை வணிகத்தின்போது மேலும் ரூ.31,000 கோடி சரிந்துள்ளது.

கெளதம் அதானியின் நிகர மதிப்பு, இந்த காலகட்டத்தில், 60 பில்லியன் டாலர்கள் ஈட்டி, அவரை ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் மூன்றாவது இடத்தில் இருந்து 21 வது இடத்திற்கு தள்ளியுள்ளது. திங்கட்கிழமை தொடர்ந்த பங்கு வீழ்ச்சி உலகளாவிய நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்துடனான வணிகத் தொடர்புகளை விலக்கிக் கொள்ளும் நிலைக்குக் கொண்டு சென்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT