கோப்புப் படம் 
வணிகம்

தொடர்ந்து சரியும் சென்செக்ஸ்: நிஃப்டி வீழ்ச்சி!

வாரத்தின் இரண்டாவது வணிக நாளான இன்று தொடர்ந்து பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிந்தன. 

DIN

வாரத்தின் இரண்டாவது வணிக நாளான இன்று தொடர்ந்து பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிந்தன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 220.86 புள்ளிகள் சரிந்து 60,286.04 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.37 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 43.10 புள்ளிகள் சரிந்து 17,721.50 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.24 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனே காணப்பட்டன. 

அதில் அதிகபட்சமாக டாடா ஸ்டீல், ஐடிசி, சன் பார்மா, மாருதி சுசூகி, என்சிஎல் டெக், டாடா மோட்டார்ஸ், எச்யுஎல், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருந்தன. 

கோட்டாக் வங்கி நிறுவனத்தின் பங்குகள் 1.59 சதவிகிதம் உயர்வுடன் காணப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக இந்தஸ் இந்த் வங்கி 1.22 சதவிகிதமும், பபாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ் முறையே 0.90, 0.61 சதவிகிதம் உயர்வுடன் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT