வணிகம்

வாட்ஸ் ஆப்பை மிஞ்சும் டெலிகிராம்: புதிய வசதிகள் அறிமுகம்!

DIN

இந்தியாவைச் சேர்ந்த டெலிகிராம் செயலி அப்டேட் மூலம் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி ஸ்பாய்லர் எபெக்ட் உடனான (spoiler effect) ஹிட்டன் மீடியா, ஜீரோ ஸ்டோரேஜ், நியூ டிராயிங் & டெக்ஸ்ட் டூல் ஆகிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

டெலிகிராம் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2013ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது. இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலியின் பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி செயலியாக டெலிகிராம் விளங்குகிறது. 

அந்தவகையில் தற்போதைய அப்டேட்டில் 3 புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

ஹிட்டன் மீடியா (Hidden media)

ஹிட்டன் மீடியா என்ற அம்சத்தின் மூலம் புகைப்படம் அல்லது விடியோவை பயனர்கள் மறைத்துக்கொள்ளலாம். ஒரு மெல்லிய திரை போன்று கோப்புகள் மறைக்கப்படும். முன்னதாக, ஸ்பாய்லர் அம்சம் என்பது குறுஞ்செய்தியாக மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது இது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

டெலிகிராமில் அட்டாச்மென்ட் தேர்வு செய்து தேவையான கோப்புகளை (படம் / விடியோ) தேர்வு செய்த பின், மேல்- வலது மூலையிலுள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி ஹைட் வித் ஸ்பாய்லர் (Hide with Spoiler) ஆபஷனை பெற முடியும். 

ஜீரோ ஸ்டோரேஜ்

ஜீரோ ஸ்டோரேஜ் தேர்வு மூலம், கைப்பேசியிலிருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது விடியோக்களை டெலிகிராம் மூலம் நாம் மீண்டும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். மேலும், புதிய விளக்கப் படம் ஒன்றையும் இந்த தேர்வு மூலம் பெறலாம். அதில் கைபேசியிலுள்ள நினைவகம், அதில் புகைப்படங்கள், விடியோக்கள், கோப்புகள் என வகைப்படுத்தப்பட்ட நினைவகத்தைக் காட்டும். அதன் மூலம் நாம் நீக்க வேண்டியவற்றை நீக்கலாம்.

நியூ டிராயிங் & டெக்ஸ்ட் டூல்

நியூ டிராயிங் & டெக்ஸ்ட் டூல் அமசத்தின் மூலம் பயனர்கள் தங்கள் செயலியில், மற்றவர்களுக்கு அனுப்பும் போட்டோ அல்லது விடியோக்களின் மீது எழுத்துகளை சேர்க்கும் போது, உள்ளடக்கத்தின் அளவு (size), எழுத்துரு (font type) வகை, பின்புலம் (background) போன்றவற்றை மாற்றிக்கொள்ளலாம். 

இவை மட்டுமில்லாமல், பிரீமியம் டெலிகிராம் பயனர்கள் 10 புதிய அனிமேஷன் எமோஜிகளை இந்த அப்டேட்டுடன் பெறலாம் எனவும் டெலிகிராம் அறிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

பெங்களூரு குண்டுவெடிப்பில் கோவையில் உள்ள மருத்துவர்களுக்கு தொடர்பு? என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ரசிகர்களின் கன்னி!

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

SCROLL FOR NEXT