இந்தியாவைச் சேர்ந்த டிசிஎஸ் நிறுவனம் அடுத்த நிதியாண்டுக்குள் 1.5 லட்சம் பேருக்கு வேலை வழங்க திட்டமிட்டுள்ளது. அரையாண்டு லாபம் குறித்து அறிவிப்பின்போது டிசிஎஸ் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், தங்களது லாபத்தின் எதிரொலியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
டிசம்பர் 2022 கணக்கின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் 6,13,974 பேர் பணியாற்றுகின்றனர். இதில், 1.25 லட்சம் ஊழியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக டிசிஎஸ் உடன் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருமே தற்போது சீனியர் பொறுப்புகளில் இருப்பதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர் வரையிலான காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 5.3 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து ரூ.58,229 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. நிகர லாபம் காலாண்டில் ஏறக்குறைய 4 சதவிகிதம் உயர்ந்து ரூ.10,846 கோடியாக இருந்தது, ஆனால் ரூ.11,200 கோடி லாபம் எதிர்பார்த்ததாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.