வணிகம்

பேங்க் ஆஃப் இந்தியா நிகர லாபம் 12% உயா்வு

கடந்த டிசம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியாவின் (பிஓஐ) நிகர லாபம் 12 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

DIN

கடந்த டிசம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியாவின் (பிஓஐ) நிகர லாபம் 12 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ.1,151 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,027 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் ரூ.11,211.14 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.14,159.60 கோடியாக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.3,408 கோடியிலிருந்து 64 சதவீதம் அதிகரித்து ரூ.5,596 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாபம் ரூ.2,096 கோடியிலிருந்து 74 சதவீதம் அதிகரித்து ரூ.3,652 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#savafg | பற்றிக் கொண்ட டி20 உலகக் கோப்பை தீ: விருந்தளித்த SA v AFG ஆட்டம் | T20 World Cup | #t20wc

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு நாளை பணி நியமன ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்!

அமெரிக்க காவல் வாகனம் மோதி பலியான இந்திய பெண் குடும்பத்துக்கு ரூ.265 கோடி இழப்பீடு

ராகுலை பதவி நீக்கக் கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்!

மகாசிவராத்திரி, வார இறுதி! சிறப்புப் பேருந்துகள்

SCROLL FOR NEXT