வணிகம்

ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய டியோ 125 ஸ்கூட்டரை ரூ.83,400 விலையில் அறிமுகம் செய்துள்ளது.

DIN

புதுதில்லி: ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய டியோ 125 ஸ்கூட்டரை ரூ.83,400 விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு டியோ ஸ்கூட்டரில் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.

தற்போது மேம்பட்ட பவர் ஸ்மார்ட் அம்சத்துடன் கூடிய புதிய 125 சிசி எஞ்சினுடன் புதிய வெர்ஷனை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.

டியோ 125 ஸ்கூட்டரில் ஐடிலிங்கில் ஸ்டாப் சிஸ்டம், என்ஜின் இன்ஹிபிட்டர் கொண்ட சைட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர், இருக்கையைத் திறப்பதற்கும் வெளிப்புற எரிபொருள் மூடியைத் திறப்பதற்கும் மல்டி-ஃபங்ஷன் ஸ்விட்ச், 171 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சுட்சுமு ஒடானி கூறுகையில், ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் இளம் இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்மார்ட் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும் டியோ 125 ஸ்கூட்டரின் விலை ரூ.83,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்.. ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்: டிரம்ப்!

போகி கொண்டாட்டம்: சென்னையில் கடும் புகை மூட்டம்!

தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT