வணிகம்

ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர லாபம் 29% உயர்வு!

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 29.13 சதவீதம் அதிகரித்து ரூ.12,370.38 கோடியாக இருந்தது. 

DIN

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 29.13 சதவீதம் அதிகரித்து ரூ.12,370.38 கோடியாக இருந்தது. 

சமீபத்தில் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி அதன் துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் ஜூலை 1ஆம் தேதி இணைந்தது. இந்த வங்கியானது  முந்தைய ஆண்டு காலத்தில் ரூ.9,579.11 கோடியையும், அதற்கு முந்தைய மார்ச் காலாண்டில் ரூ.12,594.47 கோடியையும் நிகர லாபமாகப் பதிவு செய்தது.

ஜூன் 30, 2023 நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 1.17 சதவீதமாக இருந்தது. இது மார்ச் மாத இறுதியில் 1.12 சதவீதமாகவும், முந்தைய ஆண்டில் 1.28 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய மும்பை பங்குச் சந்தையில் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 0.60 சதவீதம் உயர்ந்து ரூ.1,657 ரூபாயாக வர்த்தகமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT