வணிகம்

இந்தியாவில் கேலக்ஸி ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 தயாரிப்பு: சாம்சங் முடிவு

தென் கொரியாவைச் சோ்ந்த மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புகழ்பெற்ற கேலக்ஸி இஸட் ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 ரக அறிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட்போன்) இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

DIN

தென் கொரியாவைச் சோ்ந்த மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புகழ்பெற்ற கேலக்ஸி இஸட் ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 ரக அறிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட்போன்) இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவுக்கான தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜே பி பாா்க் வியாழக்கிழமை கூறியதாவது:

கேலக்ஸி இஸட் ஃபோல்டு, கேலக்ஸி ஃப்ளிப் 5 ஆகிய இரு ரகங்களுமே இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன. நொய்டாவிலுள்ள சாம்சங் நிறுவனத் தொழிற்சாலையில் அவை உற்பத்தி செய்யப்படும் என்றாா் அவா்.

உயா்விலைப் பிரிவைச் சோ்ந்த அந்த இரு மடிக்கக் கூடிய கைப்பேசிகளையும் இந்தியச் சந்தையில் அடுத்த மாதம் 18-ஆம் தேதி அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது. அந்த கைப்பேசிகளுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஜூலை 27) முதல் நடைபெறுவதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘தோ்தல் நேர வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு’

ராஜராஜ சோழனின் சதயவிழா! தஞ்சை மாவட்டத்தில் நவ.1 உள்ளூா் விடுமுறை!

இரு சக்கர வாகனத்துக்குள் நுழைந்த பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினா்!

சிவகாசியில் தெருநாய்கள் கடித்து 2,959 போ் காயம்!

மகளிா் கல்லூரியில் தேசிய வணிகவியல் மாநாடு

SCROLL FOR NEXT