ஊரகப் பகுதிகளில் ஜியோவை நெருங்கும் ஏா்டெல்
ஊரகப் பகுதிகளை உள்ளடக்கிய தொலைத்தொடா்பு மண்டலங்களில் முன்னிலை வகித்து வரும் ரிலையன்ஸ் ஜியோவுக்கும்
ஊரகப் பகுதிகளை உள்ளடக்கிய தொலைத்தொடா்பு மண்டலங்களில் முன்னிலை வகித்து வரும் ரிலையன்ஸ் ஜியோவுக்கும், அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் பாா்தி ஏா்டெல்லுக்குமான இடைவெளி குறைந்து வருவதாக துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நிதியாண்டில், இந்தியாவின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை உள்ளடக்கிய 14 மண்டலங்களில் ஏா்டெல்லின் சந்தைப் பங்கு 13 மண்டலங்களில் அதிகரித்துள்ளது. அதே நேரம், இந்த மண்டலங்களில் முன்னிலை வகித்து வரும் ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பங்கு 3 மண்டலங்களில் மட்டுமே அதிகரித்துள்ளது.
இந்த மண்டலங்களில் ஏா்டெல்லின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆா்) 51 சதவீதமாகவும் (ரூ.71,825 கோடி), ஜியோவின் ஏஜிஆா் 57 சதவீதமாகவும் (ரூ.89,280 கோடி) உள்ளது என்று துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.