சி.பி. குர்னானி (கோப்புப் படம்) 
வணிகம்

பாதியாகக் குறைந்த டெக் மஹிந்திரா சிஇஓ ஊதியம்!

குர்னானியின் ஊதியம் பாதியாக குறைந்தாலும், அது டெக் மஹிந்திரா ஊழியர்களின் சராசரி வருமானத்தை விட  467 சதவீதம் அதிகமாகும்.

DIN

நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டெக் மஹிந்திராவின் தலைமை செயல் அதிகாரி சி.பி. குர்னானியின் சம்பளம் 32 கோடியாக குறைந்துள்ளது. இது 2021  நிதியண்டைக் காட்டிலும் 51 சதவிகிதம் குறைவு ஆகும்.

கடந்த நிதியாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில், சிபி குர்னானியின்  சம்பளம் 32 கோடியாக குறைந்துள்ளது. இவர் சென்ற நிதியாண்டில் 63.4 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். இந்த நிலைக்கு குர்னானியின் குறைந்த எண்ணிக்கையிலான பங்கு விருப்பங்களே  இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

குர்னானி, பணியாளர் பங்கு விருப்பத் திட்டங்களில் கடந்த நிதியாண்டில் (ESOP) ரூ. 25.6 கோடி ஈட்டினார். இது கடந்த ஆண்டுக்கு முந்தைய நிதியாண்டில் ரூ. 58.8 கோடியாக இருந்தது. கமிஷனாக ரூ.1.8 கோடியும் சம்பாதித்துள்ளார்.

குர்னானியின் ஊதியம் பாதியாக குறைந்தாலும், அது டெக் மஹிந்திரா ஊழியர்களின் சராசரி வருமானத்தை விட  467 சதவீதம் அதிகமாகும்.

65 வயதுடைய குர்னானி வருகிற டிசம்பர் மாததோடு  ஓய்வு பெற இருக்கிறார். இதனையடுத்து இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மோஹித் ஜோஷி ஏற்கனவே கூடுதல் இயக்குனராக இணைந்துள்ளார்.

வரும் ஜூலை 27ஆம்  தேதி நடைபெறும் வருடாந்திரக் கூட்டத்தில் அவரின் நியமனம் பங்குதாரர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, டிசம்பர் 20ஆம் தேதி புதிய தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

கருவிழிகள் பேசுதே... ஜன்னத் ஜுபைர்!

இயக்குநர்களின் பாராட்டில் பரிதாபங்கள் விடியோ! குவியும் வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT