வணிகம்

டாடா மோட்டார்ஸ்: மொத்த வாகன விற்பனை பிப்ரவரியில் 3% அதிகரிப்பு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 3 சதவீதம் அதிகரித்து 79,705 ஆக இருந்தது.

DIN

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 3 சதவீதம் அதிகரித்து 79,705 ஆக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 77,733 ஆக இருந்தது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

உள்நாட்டு வாகன விற்பனை 2022 பிப்ரவரியில் 73,875ஐ விட 6 சதவீதம் அதிகரித்து 78,006 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 40,181 யூனிட்களாக இருந்த நிலையில், மதிப்பாய்வு செய்யப்பட்ட மாதத்தில், மின்சார வாகனங்கள் உட்பட அதன் பயணிகள் வாகனங்கள் விற்பனை 43,140 ஆக உள்ளது.

இருப்பினும் மொத்த வணிக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை, கடந்த மாதம் 3 சதவீதம் குறைந்து 37,552ல் இருந்து 36,565 ஆக குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT