வணிகம்

அசோக் லேலண்டின் விற்பனை 12,974

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த ஏப்ரல் மாதத்தில் 12,974 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

DIN

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த ஏப்ரல் மாதத்தில் 12,974 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 12,974-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 11,847-ஆக இருந்தது.

உள்நாட்டுச் சந்தையில் 2022-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 11,197 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அது கடந்த மாதம் 10 சதவீதம் உயா்ந்து 12,366-ஆக இருந்தது.

எனினும், ஏற்றுமதி 650-லிருந்து 608-ஆக குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

SCROLL FOR NEXT