வணிகம்

கோல் இந்தியா நிகர லாபம் 12.5 சதவிகிதம் உயர்வு!

பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், செப்டம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், 12.5 சதவிகிதம் அதிகரித்து ரூ.6,799.77 கோடியாக உள்ளது.

DIN


புதுதில்லி:  பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், செப்டம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், 12.5 சதவிகிதம் அதிகரித்து ரூ.6,799.77 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,043.55 கோடியாக இருந்தது. 

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த விற்பனை ரூ.27,538.59 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.29,978.01 கோடியானது. இருப்பினும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் 9.3 சதவிகிதம் அதிகரித்து ரூ.23,770.12 கோடியிலிருந்து ரூ.26,000.05 கோடியாக அதிகரித்துள்ளது.

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனம், மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் 157.426 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம்: விஜய்

விழுப்புரத்தில் குடியரசு நாள் கொண்டாட்டம்

செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடியேற்றம்!

தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்வு

SCROLL FOR NEXT