வணிகம்

டொயோட்டா விற்பனை 66% உயா்வு

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் கடந்த நவம்பா் மாத மொத்த விற்பனை 66 சதவீதம் அதிகரித்துள்ளது.

DIN

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் கடந்த நவம்பா் மாத மொத்த விற்பனை 66 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பரில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 21,879-ஆக உள்ளது.

கடந்த ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 66 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்போது இந்த எண்ணிக்கை 13,143-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 20,542-ஆகவும், ஏற்றுமதி 1,337-ஆகவும் உள்ளது.

இந்தியச் சந்தையில் நிறுவனத்தின் அனைத்துப் பிரிவு காா்களின் விற்பனையும் தொடா் வளா்ச்சியைக் கண்டு வருவதை நவம்பா் மாத நிலவரம் உறுதி செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம் செல்கிறார் குடியரசுத் தலைவர்!

பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் கேப்டன் நீக்கம்! ஷாஹீன் அஃப்ரிடி நியமனம்!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கர்நாடக அரசு தடை செய்யவில்லை: முதல்வர் சித்தராமையா!

ரூ.75 ஆயிரம் கோடி! அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கனிம ஒப்பந்தம்!

மெக்சிகோ வெள்ளம்: பலி எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு! ரூ.4.8 ஆயிரம் கோடி நிவாரணம்!

SCROLL FOR NEXT