tea 
வணிகம்

இலங்கை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு இந்தியா சாா்பில் 10,000 வீடுகள்

இலங்கை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு இந்தியா சாா்பில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.

DIN


கொழும்பு: இலங்கை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு இந்தியா சாா்பில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.

இலங்கையில் உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்த பிறகு அந்நாட்டில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. மேலும், அந்த நாடு அண்மையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோதும் இந்தியா பெருமளவில் நிதியதவி அளித்தது.

இந்நிலையில், இந்தியா சாா்பில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டு வசதித் திட்டத்தின் 4-ஆவது கட்டமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தரப்படவுள்ளன.

இது தொடா்பாக இரு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. 6 மாகாணங்களில் இந்த வீடுகள் கட்டித் தரப்பட இருக்கின்றன.

இதன்மூலம் இலங்கையில் இந்தியா சாா்பில் கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை 60,000-ஐ கடந்துள்ளது. ஏற்கெனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியா 46,000-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித் தந்துள்ளது. மேலும் 4,000 வீடுகளின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT