கோப்புப் படம் 
வணிகம்

இஸ்ரேல் - காஸா போர்: கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு!

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காஸா படையினருக்கு இடையிலான போரால், கச்சா எண்ணெய் விலை 5 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. 

DIN

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காஸா படையினருக்கு இடையிலான போரால், கச்சா எண்ணெய் விலை 5 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரின் காரணமாக வாரத்தின் முதல் வணிக நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிந்தது.

பங்குச்சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவியதால், முதலீட்டாளர்கள் பெரும் இழப்பையே சந்தித்தனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்வுடன் நிறைவடைந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.18 டாலர் அல்லது 4.94 சதவிகிதம் உயர்ந்து, பேரலுக்கு 88.76 டாலர்களாக விற்பனையானது. 

உலக நாடுகளுக்கான உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் 
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகிறது. ஆனால், அந்தப் பகுதிகளுக்குட்பட்ட இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸா எல்லையைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கு இடையேயான போரால் ஏற்றுமதியில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் சந்தையில் நிலையற்றத்தன்மை நிலவுகிறது. எனினும் ஈரான் வழக்கத்தை விடதனது உற்பத்தியை  அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT