வணிகம்

பார்சல் டெலிவரி சேவையில் ஓலா நிறுவனம்! டன்சோவுக்கு போட்டி!!

DIN


டன்சோ நிறுவனத்துக்குப் போட்டியாக பார்சல் டெலிவரி சேவையை ஓலா நிறுவனம் தொடங்கவுள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை வீடு தேடி வழங்கும் சேவையை டன்சோ நிறுவனம் வழங்கி வருகிறது.

கர்நாடகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கனரக பொருள்களையும் வாடிக்கையாளர்கள் இடமாற்றம் செய்யும் சேவையை வழங்கிவருகிறது. 
  
இந்நிலையில், டன்சோ நிறுவனத்துக்கு போட்டியாக இந்த சேவையை ஓலா நிறுவனமும் வழங்க திட்டமிட்டுள்ளது. ஓலா நிறுவனத்தின் மின்னணு வாகன தயாரிப்பு பிரிவு இந்த சேவையை கூடுதலாக வழங்குகிறது.

ஓலா பார்சல் என்ற பெயரில் பொருள்களை வீடுதேடி கொண்டு செல்லும் சேவையை பெங்களூருவில் தொடங்கியுள்ளது. காற்று மாசுபாட்டைத் தவிர்க்கும் வகையில், இந்த சேவைக்கு ஓலா நிறுவனத்தின் மின்னணு வாகனங்களை மட்டுமே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை தொடக்கி வைத்துப் பேசிய ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ), பவேஷ் அகர்வால், 5 கிலோமீட்டருக்கு ரூ.25 சேவைக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 கிலோமீட்டருக்கு ரூ. 50, 15 கிலோமீட்டருக்கு ரூ. 75, 20 கிலோமீட்டருக்கு ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் இந்த சேவை விரிவாக்கம் செய்யப்படும் எனக் குறிப்பிட்டார். 

ஊபர், போர்ட்டர், ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வீடுதேடி பொருள்களைக் கொண்டு சேர்க்கும் சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் திடீர் மழை!

கோவையில் விமான நிலையத்தில் ரூ.90.28 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

தங்கம் விலை குறைவு.. எவ்வளவு?

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவை குறைப்பு

கே.எல். ராகுலை சாடிய லக்னெள உரிமையாளர்: நேரலையில் கண்ட ரசிகர்கள் ஆவேசம்!

SCROLL FOR NEXT