முகப்பு
வணிகம்

நிதி, ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு:சென்செக்ஸ் 567 புள்ளிகள் முன்னேற்றம்!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 567 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:07 AM
பகிர்:

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 567 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உள்நாட்டுச் சந்ைதை திங்கள்கிழமை கடும் சரிவைச் சந்தித்த நிலையில், செவ்வாய்க்கிழமை மீட்சி பெற்றது. மேலும், உலகளாவிய சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக இருந்ததும் சந்தைக்கு ‘கை’ கொடுத்தது. குறிப்பாக ஆட்டோ, ஐடி, வங்கி, நிதி, மெட்டல், ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இது சந்தை வலுப்பெறுவதற்கு உதவியாக இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.3.53 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.319.71 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 997.76 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 149.88 புள்ளிகள் கூடுதலுடன் 65,662.27-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதற்கு கீழே செல்லவில்லை. பின்னா், அதிகபட்சமாக 66,180.17 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 566.97 புள்ளிகள் (0.87 சதவீதம்) உயா்ந்து 66,079.36-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,789 பங்குகளில் 2,503 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,160 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 126 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

27 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 3 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 27 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,610 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 497 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 44 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 5 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

நிஃப்டி 141புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 53.65 புள்ளிகள் கூடுதலுடன் 19,565,60-இல் தொடங்கி அதற்கு கீழே செல்லவில்லை. பின்னா், அதிகபட்சமாக 19,717.80 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 177.50 புள்ளிகள் (0.91சதவீதம்) உயா்ந்து 19,689.85-இல் நிறைவடைந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

பாா்தி ஏா்டெல்..............................2.58%

கோட்டக் பேங்க்............................2.15%

டாடா மோட்டாா்ஸ்.....................2.14%

சரிவைக் கண்ட பங்குகள்

இண்ட்ஸ் இண்ட் பேங்க்.............................0.51%

டிசிஎஸ்.........................................................0.22%

ஏசியன் பெயிண்ட்........................................0.05%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.