வணிகம்

ஆகஸ்டில் அதிகரித்த கனிம உற்பத்தி

இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 12.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

DIN

புது தில்லி: இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 12.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து இந்திய சுரங்க அமைப்பு (ஐபிஎம்) வெளியிட்டுள்ள பூர்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுரங்கம் மற்றும் குவாரித் துறையின் கனிம 
உற்பத்தியின் குறியீட்டு எண் 111.9-ஆக உள்ளது.
இது, முந்தை 2022 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் 12.3 சதவீதம் அதிகமாகும்.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் அதே மாதங்களில் கனிமத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 8.3 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் நிலக்கரி உற்பத்தி 68.4 கோடி டன்னாக இருந்தது. அந்த மாதத்தில் 28 லட்சம் டன் லிக்னைட் உற்பத்தி செய்யப்பட்டது.
மதிப்பீட்டு மாதத்தில் பாக்சைட் உற்பத்தி 14.28 லட்சம் டன்னாக உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கம், பாஸ்போரைட், மாங்கனீசு தாது, இரும்பு தாது போன்ற கனிமங்களின் உற்பத்தி நேர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்தன.
பாக்சைட், அடர் துத்தநாகம், லிக்னைட், ஈயம் உள்ளிட்ட கனிமங்களின் உற்பத்தி எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT