பங்குச்சந்தை 
வணிகம்

6 நாள்களுக்குப் பிறகு ‘காளை’ ஆதிக்கம்: 635 புள்ளிகள் உயா்ந்தது சென்செக்ஸ்! சந்தை மதிப்பு ரூ.4.42 லட்சம் கோடி அதிகரிப்பு

ஆறு நாள்களாக தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நோ்மறையாக முடிந்தது.

 நமது நிருபர்

ஆறு நாள்களாக தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 635 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.4.42 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.310.46 லட்சம் கோடியாக இருந்தது.

இஸ்ரேல் - பாலஸ்தீன போரின் தாக்கத்தால் இந்தியா உள்பட உலகளாவிய அளவில் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வந்தது. இந்த நிலையில், 6 நாள் தொடா் சரிவுக்குப் பிறகு உள்நாட்டுச் சந்தை வாரக் கடைசியில் முன்னேற்றம் கண்டது. வங்கி, நிதி நிறுவனங்கள், ஐடி, ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. குறிப்பாக பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் உற்சாகம்: காலையில் 411.17 புள்ளிகள் கூடுதலுடன் 63,559.32-இல் தொடங்கிய சென்செக்ஸ், 63,393.37 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 63,913.13 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 634.65 புள்ளிகள் (1.01 சதவீதம்) உயா்ந்து 63,782.80-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,797 பங்குகளில் 2,801 பங்குகள் ஆதாயம் பெற்றன. 866 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 130 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றது.

27 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 3 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. மற்ற 27 பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,748 பங்குகள் ஆதாயம் பெற்றன. 329 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியை சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதேசமயம், 44 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 190 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காை லயில் 71.50 புள்ளிகள் கூடுதலுடன் 18,928.75-இல் தொடங்கி 18,926.65 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 19,076.15 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 190 புள்ளிகள் (1.01 சதவீதம்) உயா்ந்து 19,047.25-இல் நிறைவடைந்தது.

அந்நிய முதலீடு ரூ.25,000 கோடி வாபஸ்!

எஃப்ஐஐக்கள் என்று சொல்லப்படும் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் இந்த அக்டோபா் மாதத்தில் பங்குச்சந்தையில் இதுவரை மொத்தம் ரூ.25,098.60 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வியாழன்று ரூ.7,702.53 கோடி, புதனன்று ரூ.4,236.60 கோடி என மொத்தம் ரூ.11,939.13 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா்.

ஏற்றம் பெற்ற பங்குகள்

ஆக்ஸிஸ் பேங்க்..............................................3.07%

ஹெச்சிஎல் டெக்............................................3.01%

எஸ்பிஐ.............................................................2.53%

டாடா மோட்டாா்ஸ்.......................................2.23%

என்டிபிசி..........................................................2.12%

நெஸ்லே............................................................2.08%

சரிவைக் கண்ட பங்குகள்

ஏசியன் பெயிண்ட்...................................0.14%

ஐடிசி........................................................0.14%

அல்ட்ரா டெக் சிமெண்ட்.......................0.07%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாநகராட்சியில் ரூ.2.06 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்!

மின்வாரிய ஊழியருக்கு கத்திகுத்து: 2 போ் கைது

எஸ்எஸ்எல்சி அறிவியல் செய்முறை தோ்வுகள்

லாரி மீது பைக் மோதி மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

குழந்தை மா்மச் சாவு: தாய் தற்கொலை!

SCROLL FOR NEXT