வணிகம்

ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிவு!

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதன்கிழமை இன்று (செப். 6) 10 காசுகள் குறைந்து 83.14-ஆக நிறைவடைந்தது. உள்நாட்டு பங்கு வணிகத்தில் ஏற்பட்ட பலவீனம் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்திய ரூபாய் மதிப்பில், கடந்த இரு வாரங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுவாகும். கடந்த இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 29 காசுகள் மதிப்பு குறைந்துள்ளது.

அமெரிக்க டாலர் மதிப்பு கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு  104.90 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றுடன் ஒப்பிடும்போது 0.067 சதவிகிதம் உயர்வாகும்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 83.02-ஆகத் தொடங்கியது. எனினும் வணிக நேர முடிவில் 10 காசுகள் குறைந்து 83.14-ஆக நிறைவடைந்தது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இந்திய ரூபாய் மதிப்பு 33 காசுகள் குறைந்து 83.04-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்மாவின் சேலையில் அன்னா பென்!

பாகிஸ்தானின் அணுசக்தியை கண்டு அஞ்சும் எதிர்க்கட்சிகள்: மோடி

‘எதிர்காலம் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ளது’ : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மோடி வாழ்த்து!

அரசியலா? சூர்யாவின் திட்டம் என்ன?

இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

SCROLL FOR NEXT