வணிகம்

ஆஸ்திரேலியாவில் படிக்க வேண்டுமா? செப்.12ல் சென்னையில் கண்காட்சி!

DIN

ஆஸ்திரேலியாவில் கல்வி பயில வேண்டும் என்ற கனவுடையவர்களுக்காக சென்னையில் 'ஸ்டடி ஆஸ்திரேலியா' என்ற கண்காட்சியை நடத்துகிறது ஆஸ்திரேலிய அரசு. 

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிபுணர்களுக்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்வதற்கும் ஆஸ்திரேலிய கல்வியைப் பற்றி அரசாங்க அதிகாரிகளிடம் கேட்கவும் இந்த கண்காட்சி வாய்ப்பளிக்கிறது.

ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையம் (ஆஸ்ட்ரேட்) செப்டம்பர் 12 ஆம் தேதி சென்னையில் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் பிற்பகல் 1.30 மணி முதல் இதற்கான கண்காட்சியை நடத்துகிறது. 

புகழ்பெற்ற ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள், ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் அரசாங்கப் பிரதிநிதிகள், கல்வி மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் துறைகளின் பிரதிநிதிகள் ஆகியோரை இதன் மூலமாக தொடர்புகொள்ள முடியும். ஆஸ்திரேலியாவில் படிப்பது குறித்த கேள்விகளுக்கான பதில்களைப் பெற இந்த கண்காட்சி தீர்வாக இருக்கும். 

மாணவர்களும் பெற்றோர்களும் முக்கிய ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக செயல்படும்.

ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள், ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் மற்றும் ஆஸ்திரேலிய கல்வித் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளிடமிருந்தும் மாணவர்கள் தகவல்கள் மற்றும் பதில்களைப் பெற முடியும். 

ஆஸ்திரேலியாவின் கல்வித் துறையில் வளர்ந்து வரும் போக்குகளைப் புரிந்துகொள்வதற்கும், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் இருப்பிடத்தை தேர்ந்தெடுப்பதற்கும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். கல்வியில் ஆஸ்திரேலியாவின் சிறப்பை விளக்கும்.

மேலும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆலோசகர்களுக்கு உலகளாவிய தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள உதவும்.

ஆஸ்திரேலியாவில் கல்வி பயில்வதைத் தீர்மானிக்கும் முன் மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை, கட்டணங்கள், மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் படிப்புகள், எதிர்கால வாய்ப்புகள் போன்ற முக்கிய அம்சங்களையும் இது உள்ளடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் கலந்துகொள்ள ஆஸ்ட்ரேட் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

தீவினைகளைத் தீா்க்கும் மாரியம்மன்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

SCROLL FOR NEXT