வணிகம்

இந்தியாவில் ஐஃபோன் தயாரிப்பு: அமெரிக்கா, துபையைவிட விலை அதிகமா!!

இந்தியாவில் தயாரிக்கப்படுவதால் பிற நாடுகளைவிட ஐஃபோன் 15 மாடல்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

DIN


இந்தியாவில் தயாரிக்கப்படுவதால் பிற நாடுகளைவிட ஐஃபோன் 15 மாடல்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது 7% ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரிக்கிறது. இதில், ஐஃபோன் 15 மாடல்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஐஃபோன் 15 மாடல்களின் விலை குறைவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அமெரிக்கா, துபை சந்தைகளில் விற்பனை செய்யப்படும் தொகையைவிட இந்தியாவில் அதிகமாகதான் விற்பனை செய்யப்படுகிறது.

ஐஃபோன் 15 மாடல் ரூ. 79,900 -க்கும், ஐஃபோன் 15 பிளஸ் ரூ. 89,900-க்கும், ஐஃபோன் 15 ப்ரோ மாடல் ரூ. 1,34,900-க்கும், ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ. 1,59,900 -க்கும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், ஐஃபோன் 15 மாடல் அமெரிக்காவில் ரூ. 66,317 மற்றும் துபையில் ரூ. 76,817-க்கும்,  ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் அமெரிக்காவில் 99,517-க்கும் துபையில் 1,15,237-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதில், ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ்(1 டெரா பைட்) மாடல் இந்தியாவில் ரூ. 1,99,000-க்கு விற்பனையாகும் நிலையில், அமெரிக்காவில் வெறும் ரூ.1,32,717-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது, இந்திய விலையைவிட 51 சதவிகிதம் குறைவாகும்.

அதேபோல், துபையில் ஐஃபோன் தயாரிக்கவில்லை என்றாலும், இந்தியாவைவிட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணமாக கூறுவது, அமெரிக்கா மற்றும் துபையைவிட இந்தியாவில் ஐஃபோன் வாங்கும் வாடிக்கையாளர்கள் குறைவாக இருப்பது என்று கூறப்படுகிறது.

அதேபோல், இந்திய வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் புதிய வகை மாடல்களை வாங்காமல் முந்தைய மாடல்களையே பெரிதும் வாங்குகிறார்களாம்.

உதாரணமாக, கடந்தாண்டு ஐஃபோன் 14 மாடல்கள் வெளியான போதும், இந்தியாவிலிருந்து 54 சதவிதம் பழைய மாடல்களையே வாங்கியுள்ளனர். அதேபோல், ஐஃபோன் 13 மாடல் வெளியானபோது வெறும் 23 சதவிகிதம் பேர் மட்டுமே புதிய மாடலை தேர்வு செய்திருந்தனர்.

ஆனால், வெளிநாடுகளில் புதிய மாடல்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் அதிகளவிலான போன்கள் இறக்குமதி செய்யப்படுவதால் கூடுதல் சலுகைகளும் கிடைப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT