வணிகம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து முடிவு!

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.83.06ஆக வர்த்தகமானது.

DIN

மும்பை : கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.83.06ஆக வர்த்தகமானது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.83.16 ஆக தொடங்கி ரூ.83.06 ஆக நிலைபெற்றது. முந்தைய அமர்வில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 21 பைசா உயர்ந்து 83.11 ஆக இருந்தது.

மேலும் பாங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் பாங்க் ஆப் ஜப்பான் கொள்கை முடிவுகளுக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தனர்.

சர்வதேச கச்சா எண்ணெய் குறியீடான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1.05 சதவீதம் குறைந்து 92.55 டாலராக உள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 570.60 புள்ளிகள் சரிந்து 66,230.24 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 159.05 புள்ளிகள் சரிந்து 19,742.35 புள்ளிகளாக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்றைய பங்குச் சந்தையில் நிகர விற்பனையாளர்களாக இருந்தனர். சுமார் ரூ.3,110.69 கோடி மதிப்புள்ள பங்குகளை அவர்கள் விற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT