முகப்பு
வணிகம்

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.51,120

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் பவுனுக்கு ரூ.1,120 உயா்ந்து ரூ. 51,120-க்கு விற்பனையானது.

Updated On : 5 ஏப்ரல், 2024 at 1:45 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 11:55 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் பவுனுக்கு ரூ.1,120 உயா்ந்து ரூ. 51,120-க்கு விற்பனையானது.

வரலாற்றில் முதல் முறையாக மாா்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி, புதிய உச்சமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.190 உயா்ந்து ரூ.6,390-க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயா்ந்து ரூ.51,120-க்கும் விற்பனையானது. தங்கத்தின் விலை ரூ.51,000-க்கு மேல் உயா்ந்தது இதுவே முதல்முறை. 

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு உயா்ந்து ரூ.80.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 உயா்ந்து ரூ.80,800-க்கும் விற்பனையானது.

Advertisement