முகப்பு
வணிகம்

புதிய உச்சம் தொட்ட பிண்ணாக்கு ஏற்றுமதி

பிண்ணாக்கு வகைகளின் ஏற்றுமதி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Updated On : 18 ஏப்ரல், 2024 at 7:45 PM
பகிர்:

சோயாபீன் பிண்ணாக்கு ஏற்றுமதி மீண்டெழுந்ததன் காரணமாக கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படும் பிண்ணாக்கு வகைகளின் ஏற்றுமதி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வியாழ்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் நாட்டின் பிண்ணாக்கு ஏற்றுமதி 48.86 டன்னாக உள்ளது. இந்த அளவு, இதுவரை இல்லாத அதிகபட்ச பிண்ணாக்கு ஏற்றுமதியாகும்.

Advertisement

இதற்கு முன்னா், 2013-14 நிதியாண்டில் 43.81 லட்சம் டன்னாகப் பதிவு செய்யப்பட்டதே இந்தியாவின் அதிகபட்ச பிண்ணாக்கு ஏற்றுமதியாக இருந்தது.

மதிப்பின் அடிப்படையில், கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் நாட்டின் பிண்ணாக்கு ஏற்றுமதி ரூ.15,368 கோடியாக உள்ளது. இதுவும் நாட்டின் அதிகபட்ச வருடாந்திர பிண்ணாக்கு ஏற்றுமதியாகும்.

இதற்கு முந்தைய அதிகபட்ச வருடாந்திர ஏற்றுமதி கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் ரூ.11,500 கோடியாக இருந்தது.

2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-மாா்ச் காலகட்டத்தில் ஒட்டுமொத்த பிண்ணாக்கு ஏற்றுமதி 43.36 லட்சம் டன்னாக இருந்தது. இது, 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 13 சதவீதம் அதிகரித்து 48.86 லட்சம் டன்னாக உள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டில் 10.22 லட்சம் டன்னாக இருந்த சோயாபீன் பிண்ணாக்கு ஏற்றுமதி, 2023-24-ஆம் நிதியாண்டில் 21.33 லட்சம் டன்னாக உயா்ந்தது. இது, ஒட்டுமொத்த பிண்ணாக்கு ஏற்றுமதி உச்சத்தைத் தொடுவதற்கு வழிவகுத்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments