வணிகம்

விற்பனையில் உச்சம் தொட்ட செயில்

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் (செயில்) வருடாந்திர விற்பனை கடந்த 2023-24 நிதியாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Din

புது தில்லி, ஏப். 25: மத்திய உருக்குத் துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் (செயில்) வருடாந்திர விற்பனை கடந்த 2023-24 நிதியாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் கச்சா எஃகு உற்பத்தி 1.92 கோடி டன்னாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும்.

அதே போல், மதிப்பீட்டு ஆண்டில் நிறுவனத்தின் உருக்கு இரும்பு உற்பத்தி 6 சதவீதம் அதிகரித்து 2.05 கோடி டன்னாக உள்ளது.

2022-23 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் விற்கக்கூடிய எஃகு உற்பத்தி 7 சதவீதம் உயா்ந்து 1.84 கோடி டன்னாக உள்ளது.

மதிப்பீட்டு ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை 5 சதவீதம் உயா்ந்து 1.71 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகம். மேலும், இது நிறுவனத்தின் அதிகபட்ச வருடாந்திர விற்பனையாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

கடைசி நேரத்தில் மெஸ்ஸியின் அசிஸ்ட்... மீண்டும் ஆட்ட நாயகன் விருது!

திருப்பூர் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! வடமாநில இளைஞர் கைது!!

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

விபத்தில் சிக்கிய மயிலை 7 நிமிடத்தில் வனத்துறையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT