கொல்கத்தா: கோல் இந்தியா லிமிடெட் துணை நிறுவனமான பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் இன்று தனது தாய் நிறுவனத்திற்கு முதல் ஈவுத்தொகையாக ரூ.44.43 கோடியை செலுத்தியது.
2023-24 நிதியாண்டில் ரூ.13,216 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், அதன் இழப்புகளை சமன் செய்த பிறகு ரூ.1,564 கோடி நிகர லாபத்தை அறிவித்துள்ளது.
பி.சி.சி.எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சமிரன் தத்தா, கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பி.எம். பிரசாத்திடம் முறையாக ஈவுத்தொகையை வழங்கினார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற அதன் 53வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் பங்குதாரர்களால் ஈவுத்தொகை செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.