வணிகம்

ஜூலையில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி

கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 6.69 சதவீதம் அதிகரித்துள்ளது.

Din

கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 6.69 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 7.41 கோடி டன்னாகப் பதிவாகியுள்ளது.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த அளவு 6.94 கோடி டன்னாக இருந்ததது. அதனுடன் ஒப்பிடுகையில் 2024 ஜூலையில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 6.69 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2023 ஜூலை மாதத்தில் 7.61 கோடி டன்னாக இருந்த நாட்டின் நிலக்கரி விநியோகம் இந்த ஜூலையில் 7.95 கோடி டன்னாகப் பதிவாகியுள்ளது. இது 4.58 சதவீத வளா்ச்சியாகும்.

நாட்டின் நிலக்கரி உற்பத்தித் திறனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் வகையில், கூடுலாக 10 நிலக்கரி சுரங்கங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோல் இந்தியா: இதற்கிடையே, அரசுக்குச் சொந்தமான நாட்டின் மிகப் பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் 6.6 சதவீத உற்பத்தி வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் 24.43 கோடி டன் நிலக்கரியை நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. இது, முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 6.6 சதவீதம் அதிகம்.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் நிறுவனத்தின் உற்பத்தி 22.91 கோடி டன்னாக இருந்தது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 5.37 கோடி டன்னாக இருந்த நிறுவனத்தின் உற்பத்தி நடப்பாண்டின் அதே மாதத்தில் 2.5 சதவீதம் அதிகரித்து 5.5 கோடி டன்னாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனம் 80 சதவீதத்துக்கும் அதிக பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர்... இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து!

தடம்புரண்ட திரைக்கதை!

கரூர் பலி 41-ஆக உயர்வு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை!

தைரியம் கூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT