முகப்பு
வணிகம்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 4:36 AM
தங்கம் விலை (கோப்புப்படம்)
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 50,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த வார தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 51,760-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாள்களில் ரூ. 1,120 குறைந்தது.

புதன்கிழமை காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ. 50,640-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை ரூ.160 உயர்ந்துள்ளது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 50,800-க்கு, ஒரு கிராம் ரூ. 6,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ. 86.50-க்கும், ஒரு கிலோ ரூ. 86,500-க்கும் விற்பனையாகி வருகின்றது.

முழு கட்டுரையைப் படிக்க →