சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் - (ஸ்பிக்)  
வணிகம்

ஸ்பிக் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் ரூ.62.55 கோடி!

சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் - (ஸ்பிக்) ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரையான காலாண்டில் ரூ.62.55 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

DIN

சென்னை: வேளாண் ஊட்டச்சத்து மற்றும் உர நிறுவனமான சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் - (ஸ்பிக்) ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரையான காலாண்டில் ரூ.62.55 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.51.39 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 31, 2024 உடன் முடிவடைந்த நிதியாண்டில், ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.113.06 கோடியாக இருந்தது என்று நிறுவனம் தனது பிஎஸ்இ தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் மொத்த வருமானம் ரூ.571.19 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.756.37 கோடியானது.

மார்ச் 31, 2024 உடன் முடிவடைந்த ஆண்டில் மொத்த வருமானம் ரூ.1,962.16 கோடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT