புதுதில்லி: வேதாந்தா குழும நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட், தனது வாரியத்தில் உள்ள தன்னிச்சை இயக்குநர்களின் எண்ணிக்கை தொடர்பான செபி விதிமுறைகளுக்கு இணங்காததற்காக பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. ஆகியோரிடமிருந்து தலா ரூ.5.37 லட்சம் அபராதம் என மொத்தம் ரூ.10.73 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் நிறுவனமானது, செபியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து சுரங்க அமைச்சகத்துடன் முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தன்னிச்சை இயக்குநர்களின் எண்ணிக்கை தொடர்பாக, செபி ஒழுங்குமுறை 17(1) க்கு இணங்காததற்காக அபராதம் விதிக்கும் விதமாக, ஆகஸ்ட் 21, 2024 தேதியிட்ட கடிதத்தை பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. இடமிருந்து பெற்றுள்ளதாக ஹிந்துஸ்தான் ஜிங்க் தெரிவித்துள்ளது.
தற்போது நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பெண் இயக்குநரின் தேவை ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.